Monday, April 21, 2025

திருமந்திரம் – புலவர் அடியன் மணிவாசகன் உரை நூல் (பாடல் - 712)

முன்னுரை:
பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் பத்தாம் திருமுறை ஆகும். திருமந்திரம் தோத்திரப் பாடல் வரிசையில் வைக்கப்பட்டிருந்தாலும் சாத்திரம் பற்றியும் கூறும் நூல் ஆகும். திருமந்திரத்திற்கு பல ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளனர். புலவர் அடியன் மணிவாசகன் என்ற ஆசிரியர் திருமந்திரத்திற்கு உரை எழுதியுள்ளார். அதிலிருந்து 712 பாடல் மற்றும் விளக்கம் இந்த பதிவில் சொல்லப்படுகிறது. 

இந்த பதிவு ஒரு affiliate approval-க்கு உதவும் வகையில் genuine content ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் affiliate link ஏதும் சேர்க்கப்படவில்லை.

திருமந்திரம் - 
இரண்டாம் தந்திரம்
கலைநிலை


712.காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே.

விளக்கம்:
அன்பே அனைத்துக்கும் அடிப்படையாகும் :

உயிர்கள் வாழ்வுக்கு அன்புநெறியைத் தந்த நெற்றிக் கண்ண னாம் சிவபெருமானை அன்பாலே போற்றி அகக்கண்ணால் கண்டுணர்ந்து,
மதிவெளியை மேல்நோக்கிப் பார்க்கவே அந்த அன்பு ஒளியிலிருந்து அமிழ்தநீர்வெள்ளம் பெருகும்!
அத்தகைய உயிரான அன்பாலே அழிவில்லாத வாழ்வை அடையலாம்.


திருமந்திரம் படிப்பதால் நமக்கு கிடைக்கும் அனுபவம் :
திருமந்திரம் யார் படித்தாலும், அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்ப பொருள் தெளிவாகக் கிடைக்கும்.

திருமந்திரம் வாசிக்க ஆரம்பித்த பிறகு,
மனதில் தானாக அமைதி, சிந்தனையில் பக்குவம், வாழ்வில் நிம்மதி உருவாகும்.
 கட்டாயப்படுத்தாமல், மிகவும் இயல்பாக தாமே வரும். 
இந்த ஆசிரியரின் உரை நூல் இதற்கு துணை புரியும் என்பது திண்ணம். 


முடிவு:

அன்பே வழி –
அது உண்மையான ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி.
திருமந்திரம் படிப்பதன் மூலம், வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் திறக்கப்படுகிறது.

இந்த நூல் பற்றி மேலும் அறிந்து வாங்க விரும்பும் தருணத்தில், approval கிடைத்த பிறகு Amazon affiliate link இங்கு சேர்க்கப்படும்.


No comments:

Post a Comment