திருநீற்று பச்சிலை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா. உலகமெங்கும் ‘பேசில்’ (Basil) என்று அழைக்கப்படும் மூலிகை இது.
1. சப்ஜா விதையின் தோற்றம்
- திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும்.
- இதன் இலைகள் நறுமணமிக்கவை; இவை கற்பூர மணம் கொண்ட எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றன.
2. உடலின் தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி
சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் இதை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.
3. தோல் மற்றும் விஷக் கடிகளுக்கான நிவாரணம்
- படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு இலைச்சாறு பூசலாம்.
- பூச்சி கடித்தால், அந்தப் பகுதியில் சாற்றை தேய்த்தால் நிவாரணம் தரும்.
- வாந்தி, காதுவலி, காது நோய்கள் – இவற்றுக்கும் சாறு பயனளிக்கும்.
4. முகப்பரு மற்றும் முகத்தழும்புகளுக்கு தீர்வு
டீனேஜ் பருவத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகளை நீக்க பச்சிலை சாற்றை முகத்தில் தேய்க்கலாம்.
5. சப்ஜா விதையின் மருத்துவ பயன்கள்
- பித்தத்தை குறைக்கும்.
- உடல் சூட்டை தணிக்கும்.
- நார்ச்சத்து அதிகம் – சர்க்கரை நோயாளிகளுக்கும், எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது.
6. ஜீரணப் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல்
ஜீரண பாதை புண்கள், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், சிறுநீர் பாதை பிரச்சனைகள் – இவையெல்லாம் சப்ஜா விதையால் நிவாரணம் பெறலாம்.
7. கோடையில் உடல் சூட்டைக் குறைக்கும்
சப்ஜா உடலை சீதோஷ்ண நிலைக்கு கொண்டு வரும். கோடையில் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.
கேள்விப்பட்டிருக்கிறேன். இனிமேல்தான் உபயோக படுத்த வேண்டும். மிக்க நன்றி
ReplyDelete🙏🙏
Delete