Tuesday, March 11, 2025

எது மக்களுக்கான அரசியல்

நம் நிலத்தின் மலை வளம், மண் வளம், காட்டு வளம் அனைத்தையும் சுரண்டி பிழைக்கும் ஒரு கூட்டமும் அவர்களிடம் பங்கு பெற்றுகொண்டு அமைதியாக கடந்து செல்லும் மற்றொரு கூட்டமும் தான் வெளியில் அடித்து கொள்வது போல நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

நம் நில வளம் எல்லாம் சுரண்டி எடுத்த பிறகு நாம் பாலைவனத்தில் தான் தமிழும் படிக்க வேண்டும் மூன்றாவது மொழியும் படிக்க வேண்டும். 


மக்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி பேசாமல் மத உணர்ச்சியை வைத்தும் மொழி உணர்ச்சியை வைத்தும் அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களுக்கானவர்கள் கிடையாது. 

ஒரு மலை எந்த மதத்தினருக்கு சொந்தம் என போராட இங்கு பலருண்டு. ஆனால் மலைகளை எல்லாம் வெட்டி குவாரி நடத்தும் திருட்டு கூட்டத்திற்கு எதிராக போராட இவர்களில் எவரும் வரமாட்டார்கள்.

சாதி மத இன மொழி உணர்வுகள் மக்களை முட்டாளாக்க தான் பயன்படும் ... 
இந்த உணர்வுகளால் வரலாற்றில் மக்கள் இழந்தது அதிகம்... 

இது புரியாத வரை மக்களுக்கான அரசியல் இங்கு ஒருபோதும் உருவாகாது.

No comments:

Post a Comment