Monday, December 11, 2023

தமிழும் அறமும்

 தமிழும் அறமும்

அறம் என்ற சொல் தமிழில் மிகப் பழமையானது.

குறைந்தது இரண்டாயிரம் வருட பழைமையான சொல்.உலகின் வேறு எந்த மொழியிலும் இதற்கு நிகரான சொல் இருப்பதாக தெரியவில்லை. அறம் என்ற சொல்லின் பொருள் இன்றைக்கு குழப்பப்படுகிறது. 


அறத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற சொல் Ethics. நீதி வேறு, அறம் வேறு. நீதி என்பது சட்டத்தைப் பின்பற்றி இருக்கும். ஆனால் அறம் சட்டத்தைக் கடந்து இருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தால் அங்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்படும். ஆனால் நிறைய நபர்களின் மேல் நீண்ட நாட்களாக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு வராமலே இருப்பதுண்டு. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வழக்கிற்கு இத்தனை நாட்களுக்கு தீர்ப்பு தர வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பில் எந்த கால வரையறையும் சொல்லப்படவில்லை. நீதி தான், நியாயம் தான் ஆனால் அது நீதியாக இல்லை. நீதிமுறையில் வழங்காத நீதி அநீதியாக பெயர் பெற்றுவிடும். இது சட்ட சிக்கல். 


நீதியையே முறையாக வழங்கவில்லை என்றால் அது அநீதி. சட்டம் நீதியாக சொல்லப்பட்டிருந்தாலும் அது முறையாக இல்லை என்றால் அங்கே மோதுவது அறம். இதுதான் விஷயம். 


இதைதான் எல்லா சட்டங்களும் அறங்களாகும்

ஆனால் எல்லா அறங்களும் சட்டங்கள் ஆகாது

என்பர். 


தமிழுக்குள் அறம் என்ற சொல் சங்க இலக்கிய த்திலிருந்து வெளிவந்து திருக்குறளில் திட்டவட்டமான முடிவைப் பெறுகிறது. 

திருக்குறளில் சமணம் என்ற சொல்லோ, பௌத்தம் என்ற சொல்லோ இல்லை.இந்தியா முழுக்க பௌத்தம் இருந்தது, இந்தியா முழுக்க சமணம் இருந்தது. ஆனால் பௌத்தம் எந்த நாடுகளிலெல்லாம் பரவியதோ அந்த நாட்டில் மக்களை அழிப்பதற்காக அங்கு வருகிறது. சீனாவாக இருந்தாலும் சரி, ஈழமாக இருந்தாலும் சரி. பௌத்தத்தைப் பின்பற்றுகிறவன் அரசியலை முன்னெடுக்கிறான். இது இப்போது வரையிலும் கூட நடைமுறையில் இருக்கும் ஒன்று. 


சமணம் கொல்லாமையை வலியுறுத்தினாலும் வியாபாரத்தனமாக வேலை செய்யும். வியாபாரம் என்பது செல்வத்தை முதலாளிகளுக்கு வழங்குவது. 


இந்த பௌத்தமோ, சமணமோ இல்லாத பார்வை திருவள்ளுவருடையது. இது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். 


அடுத்து பௌத்த, சமண நூல்கள் பெண்களை முன்னெடுக்காமல் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பெண்கள் பெயரை வைத்து ஏன் இலக்கியங்களை

(மணிமேகலை, சிலப்பதிகாரம்) பாடியது. இங்கு குடும்பம் ஒழுங்காக நடக்கிறது. அவர்களை ஈர்க்க பெண் கதாபாத்திரங்களை முக்கியமானதாக வைக்கிறது. இந்த இலக்கியப் போக்கு மிகப்பெரிய புத்திசாலித்தனம். சமூகத்தை உடைக்கும் வேலை. 


இதை இன்னும் தெளிவாக பார்க்கலாம். தொல்காப்பியம் அதனோடு சார்புடைய சங்க இலக்கியம். 


தொல்காப்பியம் ஒரு அறத்தைப் பற்றி பேசுகிறது. அது என்ன என்றால் நிலம், நீர், தீ, வளி, வான் ஐந்து பூதங்கள். இவ்வைந்து பூதங்களை தொல்காப்பியம் பேசுகிறது.


"நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்று பேசி  


"உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்


திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்"


- தொல்காப்பியம்1579


ஒரு மொழியைக் கையாண்டால், அவன் வாழ்க்கையில் அடுத்தவருடன் தொடர்பு கொள்ள உதவும் கருவியாகிய மொழியை பயன்படுத்தினால் திரிவு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். அதாவது நேர்மையாக அல்லது சொல்லை திறம்பட பேசுதல் அதுதான் செய்யுளுக்கு, 


"செறுத்த செய்யுள் செய் செந்நாவின்" என்று கபிலர் கூறுகிறார். 


இந்த அடைமொழிகளும் சங்கஇலக்கியத்தில் தான் வருகிறது. 


இவைகள் செய்யுளுக்கு, மொழிக்கு ஏதோ இலக்கணத்திற்காக என்பது மட்டுமல்ல, வாழ்க்கையில் திட்டவட்டமாக சங்க இலக்கியம் ஒரே ஒரு செய்தியை மனரீதியாக ஆதாரமாகக் கொண்டது. அது எதில் என்றால், "நின்ற சொல்லர்;நீடுதோன்று இனியர்;" -         கபிலர், நற்றிணை. 


இந்த பாடல் மலைப்பகுதியில் இருந்த ஒருத்தி, தன் காதலனைப் பற்றி தோழியிடம் கூறுவது. 

என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர் என்கிறாள்.


சொல்லைக் காப்பாற்ற வேண்டும்.  


சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பதே அறம். 


வாழ்க்கையில் எந்த நிலையிலும் சோரம் போகாமல், விட்டுக் கொடுக்காமல் நேர்மையாக வாழ்ந்த அந்த வாழ்க்கையைக் கண்டெடுப்பதே தமிழின் அக இலக்கியங்கள்.

No comments:

Post a Comment